7,500 கோடியில் புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்!
லண்டனில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக 7,500 கோடி ரூபாயில் பிரம்மாண்ட கட்டடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.
தற்போது அதே கட்டடத்தில் கூகுள் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் 6,400 ஊழியர்களை கொண்டுள்ள கூகுள், விரைவில், எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இந்த செயின்ட் கில்ஸ் கட்டடத்தை, ஊழியர்கள் வசதியாக பணியாற்றும் வகையில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக வாங்கிய வளாகத்தில் காற்றோட்டத்துடன் பணியாற்றும் வகையிலும் புதிய வசதிகள் செய்யப்பட உள்ளதாக, கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.