கூகுள் மீது 425 மில்லியன் டாலர் அபராதம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்ற ஜூரி, பயனர்களின் தனியுரிமையை மீறிய குற்றச்சா்டடின் பேரில் கூகுள் நிறுவனத்திற்கு 425 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கோடிக்கணக்கான பயனர்கள் தங்கள் வெப் என்ட் எப் எக்டிவிட்டி “Web & App Activity” அமைப்புகளை மாற்றி, செயலிகளின் தரவுகளை சேகரிக்க அனுமதிக்கவில்லை மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், கூகுள் தொடர்ந்தும் மூன்றாம் தரப்பு செயலிகளின் பயன்பாட்டு தகவல்களை சேகரித்து, விற்றது என்று வழக்கு தொடரப்பட்டது.
2020 ஜூலை மாதம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு, சுமார் 98 மில்லியன் பயனர்களை உள்ளடக்கிய வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வழக்கறிஞர்கள் கூகுள் பயன்பாட்டு தரவுகளை விற்று லாபம் ஈட்டியது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கூகுள் நிறுவனம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
“எங்கள் தனியுரிமை கருவிகள் பயனர்களுக்கு முழு கட்டுப்பாட்டை வழங்குகின்றன. பயனர்கள் பேர்சனலைசேசனை personalization-ஐ நிறுத்தினால், அதை நாங்கள் மதிக்கிறோம்,” என்று கூகுள் பேச்சாளர் ஜோசே காஸ்டனெடா தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில், டெக்சாஸ் மாநிலத்தில் முகம், குரல் அடையாளத் தகவல்களை அனுமதியின்றி சேகரித்தது மற்றும் இடம் (location) கண்காணிப்பை பயனர் நிறுத்திய பின்னும் தொடர்ந்தது என்பதற்காக கூகுள் நீறுவனம் 1.375 பில்லியன் டாலர் செலுத்த ஒப்புக்கொண்டது.