கோட்டாபய தப்பி செல்வார் என நினைக்கவே இல்லை! இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்
ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னரே கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தனது குடும்பத்துடன் மாலைத்தீவுக்கு இன்று அதிகாலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
இது தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா (Sanath Jayasuriya) கூறும்போது,
இலங்கையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தப்பி செல்வார் என நினைக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

இதுபோன்று நடக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. அவர் பதவி விலகி நாட்டிலேயே தொடர்ந்து இருப்பார் என நாங்கள் நினைத்தோம். துரதிர்ஷ்டவசத்தில் அது நடக்கவில்லை. இலங்கையில் இருந்து இன்று காலை மாலைத்தீவுக்கு சென்று விட்டார் என கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக எரிபொருள், மின்சாரம், எரிவாயு மற்றும் சுகாதார நெருக்கடியை இலங்கைவாசிகள் சந்தித்தனர்.

மக்களுக்கு தேவையானவை இல்லை. நீண்டகாலம் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்ட அவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இருப்பினும், போராட்டம் பெருமளவில் தொடர்ந்து அமைதியாகவே நடந்து முடிந்தது என கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு வாழ்க்கை கடினம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. இருந்தபோதும், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவில்லை என்றும் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        