அமெரிக்காவில் 18,000 இந்தியர்களை வெளியேற்ற அரசு தீர்மானம்
அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் பதவியேற்க உள்ள நிலையில் அந்நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என, டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை சார்பில், முறையான ஆவணங்கள் இன்றி தங்கள் நாட்டில் தங்கி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 லட்சம் பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்துள்ளது.
இதில் இந்தியர்கள் 18,000 பேர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.