மத்தளவிமான நிலையம் தொடர்பில் அரசின் முக்கிய தீர்மானம்
மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அமைச்சர், பொருத்தமான வெளிநாட்டு பங்காளியுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
மத்தல விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மொத்த இழப்பு 38.5 பில்லியன் ரூபாய் ஆகும்.
இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.