ஸ்காப்ரோவில் 40000 டொலர் பெறுமதியான அலைபேசிகள் கொள்ளை
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அலைபேசி விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் காட்சி அறையை உடைத்து அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன.
சுமார் 40,000 டொலர்கள் பெறுமதியான அலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்த காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ரொறன்ரோவின் கிங்ஸ்டன் மற்றும் மெக்வோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வர்த்தக நிலையம் அமைந்துள்ளது.
முகமுடிகளை அணைந்த மூன்று பேர் சுத்தியல்களைக் கொண்டு காட்சியறையை உடைத்து அலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாகவும் மற்றும் ஒருவரும் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்பு பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவத்தின் போது உரிமையாளரின் மகன் கொள்ளையை தடுக்க முயற்சித்த போதும் அது வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையர்கள் குறித்த இளைஞரை தாக்கி பொருட்களை கொள்ளை இட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடையின் உரிமையாளர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.