மூன்று கல்லூரி பட்டப்படிப்புடன் உயர்நிலைப் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவன்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூன்று பட்டப்படிப்புடன் தமது உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.
17 வயதேயான Tristan Andrade எதிர்வரும் ஜூன் மாதம் தமது பாடசாலை கல்வியை நிறைவு செய்கிறார். ஆனால் அத்துடன் அவர் மூன்று பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதையும் சேர்த்து கொண்டாடவிருக்கிறார்.
6ம் வகுப்பில் படிக்கும் போதே கல்லூரி பாடங்களையும் கற்றுக்கொள்ள துவங்கியுள்ளார். ஆனால் 8ம் வகுப்பில் வைத்தே கல்லூரி ஒன்றில் பதிவு செய்து கொண்டுள்ளார்.
தினசரி பாடசாலை வேளைக்கு பின்னர் ஒன்லைன் ஊடாகவோ கல்லூரி வளாகத்தில் சென்றோ தமது பட்டப்படிப்புக்கான பாடங்களை அவர் கற்றுக்கொண்டுள்ளர்.
எதிர்வரும் 19ம் திகதி அவர் தமது மூன்று பட்டப்படிப்பையும் நிறைவு செய்து சான்றிதழ் பெறவிருக்கிறார். கணிதம், artificial intelligence (AI), மற்றும் computer science ஆகிய மூன்று பட்டப்படிப்புகளை முடித்துள்ளதால், எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி பாடசாலை காலகட்டத்திலேயே மூன்று பட்டப்படிப்புகளை முடித்துள்ளதால், இது எனக்கு பல ஆண்டு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் மற்றும் எனது கனவுகளை விரைவாக தொடர எனக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.