கனடாவில் திருட வந்தவரை பந்தாடிய மூதாட்டி! வைரல் காணொளி
கனடாவின் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் எலைன் காலவே 73 வயதான ஒரு வயதான மூதாட்டி ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு மர்மநபர் பொருட்களை திருட முயன்றார் மர்ம நபரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் மர்ம நபரோ, அவரை கீழே தள்ளிவிட முயன்றுள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி, மர்ம நபரின் முகமூடியை கழற்றியதுடன், பொருட்களையும் கைப்பற்றினார்.
It happened in Canada at a Wal Mart https://t.co/Vttbf3nnjO
— The Daily Sneed™ ? (@Tr00peRR) February 1, 2022
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த வீர செயலை செய்த பெண்மணி கூறுகையில்,
நான் திருடனை பிடிக்க முயன்றேன். ஆனால் அவன் ஒரு கையில் பொருட்களும், மறுகையில் சைக்கிளும் வைத்திருந்ததால், அவனால் என்னை தாக்க முடியவில்லை.
திருடனின் முகமூடியை நான் கழற்றியபின்னர் அவர் அங்கிருந்து சைக்கிளில் ஓடிவிட்டான் என அந்த மூதாட்டி கூறினார்.
இந்நிலையில் வயதான அந்த பெண்மணியின் துணிச்சல் மிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
