கனடாவில் முதியவர்களிடம் பெருந்தொகை கொள்ளை: இலங்கையர் உட்பட சிக்கிய ஐவர்
கனடாவில் முதியவர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இன்னொருவர் கைதாகியுள்ளார்.
கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் உள்ள தாத்தா பாட்டிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் சுமார் 1.1 மில்லியன் டொலர் தொகை குறித்த கும்பலால் திரட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் தற்போது அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த 19 வயது Michelle Jordan என்பவர் கைதாகியுள்ளார். இவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
2021 மார்ச் மாதம் தொடங்கி இதுசரை சுமார் 100 வழக்குகள் முதியவர்களை கொள்ளையிட்டது தொடர்பில் பதிவாகியுள்ளது.
மொத்தமாக 1.1 மில்லியன் டொலர் அளவுக்கு குறித்த கும்பல் திரட்டியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையரான Ayiinthan Sri Ranjan உட்பட ஐவர் மீது இதே கொள்ளை சம்பவம் தொடர்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.