பூங்காவில் நடைபயணம் சென்ற தம்பதியினருக்கு அடித்த அட்டகாசமான அதிஷ்டம்
அமெரிக்காவின் மாநில பூங்காவில் நடைபயணம் செய்தபோது தம்பதியினருக்கு மஞ்சள் நிற அரியவகை வைரம் ஒன்று கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவை சேர்ந்த நூர்தீன் மற்றும் மைக்கல் தம்பதியினர் நாட்டின் இரண்டு தேசிய பூங்காவுக்கு செல்ல முடிவெடுத்தனர். அதன்படி கடந்த மாதம் அமெரிக்காவின் Murfreesboro வில் உள்ள 911 ஏக்கரில் அமைந்திருக்கும் Crater of Diamonds என்ற மாநில பூங்காவிற்கு சென்றுள்ளனர். இந்த பூங்காவில் சுமார் 40 நிமிடங்கள் இந்த தமபதியினர் நடைப்பயிற்சி செய்துள்ளனர்
அப்போது அதில் ஒருவருக்கு மட்டும் எதோ பிரகாசமாக மின்னுவதாக கூறியுள்ளார். இதனை பூங்காவின் வைர கண்டுபிடிப்பு அதிகாரியிடம் கொடுத்து சோதித்தபோது அது வைரம் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரமானது ஜெல்லி மீன் அளவில் எலுமிச்சை நிறத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரத்தின் மதிப்பானது 15,330 டொலர் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் பூங்காவில் 258 வைரங்கள் பார்வையாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.