பிரித்தானியா மக்களுக்கு அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சித் தகவல்!
பிரித்தானியாவில் குறைந்த வருவாய் கொண்ட எட்டு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு, அரசு நிதியுதவி ஒன்றை வழங்கத் துவங்கியுள்ளது.
நேற்று முதல் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் வாழும் குடும்பங்களில் நான்கில் ஒரு குடும்பத்துக்கு, 326 பவுண்டுகள் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வரும் இலையுதிர்காலத்தில் மீண்டும் இரண்டாவது தவணையாக 324 பவுண்டுகளும் வழங்கப்பட உள்ளன. இன்னொரு மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், மக்கள் இதற்காக எந்த விண்ணப்பமும் செய்யவேண்டியதில்லை.
தானாகவே அந்த தொகை அவர்களை வந்தடைந்துவிடும்.

இதுகுறித்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson), பொதுமுடக்கத்தின்போது மக்களை கவனித்துக்கொண்டோம், அதேபோல, இந்த கடினமான பொருளாதார சூழலினூடே கடந்து செல்வதற்கும் அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்வோம் என்றார்.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        