மலேசியா பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
மலேசியாவில் குப்பை தொட்டியில் பெண் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அதிரிச்சி அடைந்தனர்.
மலேசியாவின் ஷா ஆலம் பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் குப்பை போட வந்த ஒருவர் அங்கு பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்து போன அந்த நபர் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிஸார், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோரை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அப்போது அங்கு சடலத்தின் மீது சுற்றிருந்த பாலித்தீன் கவரை பிரித்தனர். ஒவ்வொரு கவராக பிரித்த பொலிஸாருக்கு காற்றிருந்தது ஏமாற்றம். ஏனென்றால், அது உடல் அல்ல.
மெழுகால் செய்யப்பட்ட பெண் செக்ஸ் பொம்மை, பார்ப்பதற்கு அப்படியே பெண் போலவே இருந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொலிஸார் கூறுகையில், குப்பை தொட்டி அருகே பெண் சடலம் கிடப்பதாக ஒருவர் போன் செய்தார். அதனால் வந்து பார்த்தோம், ஆனால், அது மெழுகால் செய்யப்பட்ட பெண் பொம்மை.
பட்ட பகலில் யார் இதை போட்டு சென்றது என்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.