கேகாலையில் தாய் உட்பட இரு பெண் பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்!
Kegalle
Sri lanka
By Independent Writer
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் இரு பெண் பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கேகாலை, ரம்புக்கணை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கியே குறித்த 3 பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த தாயும், 8 வயது மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்துள்ளனர்.
தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US