ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞருக்கு நேர்ந்த பெரும் சோகம்
ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் 3 வாரங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந் திகதி அந்நாடு மீது ரஷ்யா படையெடுத்தது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.
உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
இந்நிலையில் ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் ஆர்டியோம் தத்சிஷின்(Artiom Thaddeus) காயமடைந்து உள்ளார்.
அவர் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அந்நாட்டில், தேசிய அளவில் சிறந்த நடன கலைஞரான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.