கனடாவில் முதல் தடவையாக கறுப்பினத்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்
கனடிய நாடாளுமன்றின் சபாநாயகராக முதல் தடவையாக கறுப்பினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் பெர்குஸ் இவ்வாறு சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
14 வயது முதலே நாடாளுமன்ற அமர்வுகள் பற்றிய விடயங்களை பின்தொடர்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாசி போராளி ஒருவரை நாடாளுமன்றிற்கு அழைத்து கௌரவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கனடிய நாடாளுமன்றின் சபாநாயகராக கடமையாற்றிய அன்தனி ரோட்டா பதவி விலகினார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பெர்குஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரகசியமான முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலம் பெர்குஸ் சபாநாயகர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
54 வயதான பெர்குஸ் கடந்த 2015ம் ஆண்டில் முதல் தடவையாக கியூபெக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.