ரொறன்ரோவில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மீண்டும் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி பதிவாக உள்ளது.
நாளைய தினம் (02-09-2022) பெற்றோலின் விலை 2 சதத்தினால் வீழ்ச்சியடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஒன்றாரியோவின் பல பகுதிகளிலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 149.9 டொலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு எரிபொருட்களின் விலைகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 66 சதங்கள் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளது.
60 முதல் 70 லீற்றர் எரிபொருளை நிரப்பும் போது சுமார் 40 டொலர்கள் வரையில் சேமிக்க முடிகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வார இறுதியில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்லும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.