120 மொழிகளில் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனைப் படைத்த சிறுமி
இந்தியாவில் கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் சதிஷ் மற்றும் சுமித்ரா. இவர்களது மகள் தான் சுசேத்தா சதிஷ்.
இந்தியாவிலிருந்து இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபையில் சென்று அங்கயே செட்டில் ஆகியுள்ளனர். இந்த நிலையில் இவர்களது மகள் சுசேத்தா சதிஷ் 122 மொழிகளில் படைகள் பாடி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.
முன்னதாக இவர் ஏற்கனவே கடந்த 2010 ம் ஆண்டு துபாயில் உள்ள இந்தியா கலையரங்கத்தில் இடப்பெற்ற கலைநிகழ்ச்சி ஒன்றில் 102 மொழிகளில் பாடி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி மாணவி சுசேத்தா சதிஷ் கூறியதாவது,
சிறுவயதிலிருந்தே எந்த பாடலை கேட்டாலும் அதன் இசையும் அந்த பாடும் என் ஆழமானத்தில் எளிதாக பதிந்துவிடும். இதன் காரணமாக சாதனை முயற்சியாக சுமார் 120 மொழிகளில் பாடி உலக சாதனைப் படைத்தேன்.
இந்த சாதனை முயற்சியின்போது ஜேர்மன் மொழியில் பாட மட்டும் சற்று சிரமப்பட்டேன். இறுதியில் அதனையும் நன்றாகப்பாடி சாதனைப் படைத்துள்ளேன்.