வளைகுடா போர்; இரவு 10 மணியுடன் மூட வேண்டும் ;பாகிஸ்தானில் இன்று முதல் கட்டுப்பாடுகள்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தினால் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ள நிலையில் பாகிஸ்தானில் இன்று முதல் எரிபொருள் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதனால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு
குறிப்பாக, ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்டவற்றில் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதியளவு பொதுமுடக்கத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் கடைகள், வணிகள வளாகங்களை இரவு 10 மணியுடன் மூட வேண்டும். உணவகங்கள், திருமண அரங்குகள் 10 மணிக்கு மேல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஷபாஸ் ஷரிப் தலைமையில் நடத்தப்பட்ட உயர்மட்டக் குழு கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.