கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து எழுந்துள்ள கேள்வி
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Tumbler Ridge பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டுத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்பு, சந்தேக நபரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் ஏன் மீண்டும் திருப்பி வழங்கப்பட்டன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய ஜெஸ்ஸி வான் ரூட்ஸலார் (Jesse Van Rootselaar) என்பவருக்கு நீண்டகால மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவரது வீட்டுக்கு பலமுறை போலீசார் சென்றிருந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உள ஆரோக்கிய சட்டத்தின் கீழ் அவர் ஒருமுறை தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள், முன்பு பறிமுதல் செய்து பின்னர் திருப்பி வழங்கப்பட்ட அதே ஆயுதங்களா என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
திருப்பி வழங்கப்பட்ட துப்பாக்கிகள் நேரடியாக சந்தேக நபரின் சொந்தமானவை அல்ல; வீட்டிலிருந்த வேறு ஒருவருக்குச் சொந்தமானவை என தெரிவிக்கப்படுகிறது.
இருந்தாலும், மனநிலை சிக்கலுடன் வாழும் ஒருவர் இருக்கும் சூழலில் ஆயுதங்கள் வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டாமென சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன என்று துப்பாக்கி கட்டுப்பாட்டு ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.