பயிற்றுவிப்பாளர் தமக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என கனேடிய வீராங்கனை குற்றச்சாட்டு
பயிற்றுவிப்பாளர் தமக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என கனடாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை எபி பியர்சன் ஸ்பாடாபோரா குற்றம் சுமத்தியுள்ளார்.
பயிற்றுவிப்பாளரான டேவ் புருபேக்கர் மற்றும் அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் தம்மை பாலியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும துன்புறுத்தினர் என ஸ்பாடாபோரா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக தம்மை உடல், உள, வார்த்தை மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புருபேக்கரிடமிருந்து தம்மையும் ஏனைய வீர வீராங்கனைகளையும் பாதுகாப்பதற்கு விளையாட்டுத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்பொழுது 38 வயதான ஸ்பாடாபோரா தனக்கு 17 வயதாக இருந்த போது தகாத முறையில் ஸ்பரிசம் செய்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த துன்புறுத்தல்கள் காரணமாக தாம் வாழ்க்கையில் பெரும் நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்நோக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.