கனடாவில் செயற்கை நுண்ணறிவினால் புதிய சைபர் அச்சுறுத்தல்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக சைபர் பாதுகாப்பு துறையில் புதிய அபாயங்கள் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனேடிய இணைய பதிவாளர் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாகும் அச்சுறுத்தல்களை மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டு தங்களது பாதுகாப்பு முறைகளை மாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கனடாவிலுள்ள நிறுவனங்களில் 43 வீதம் நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள் தற்போது செயற்கை நுணண்றிவை தங்களது புதிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது “அதிக அளவில் விரிவாக்கக்கூடியது, தனிப்பயனாக்கக்கூடியது, நுட்பமானது மற்றும் நம்பத்தகுந்தது” என விவரிக்கப்பட்டுள்ளது.
போலி படங்கள் மற்றும் வீடியோக்கள் (deepfakes), கணினி உருவாக்கிய குரல்கள், மற்றும் செயற்கை மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் — இவை அனைத்தும் முக்கிய அச்சுறுத்தல்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தற்போது தீங்கு விளைவிக்கும் குறியீடுகளை எழுதுவதிலும், கணினி முறைமைகளில் உள்ள பலவீனங்களை கண்டுபிடிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது என சைபர் பாதுகாப்பு நிபுணர் ரிதேஷ் கோடக் தெரிவித்தார்.