புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட ஹமாஸ்
கட்டார் மற்றும் எகிப்து ஆகிய மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட புதிய போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் புதிய முன்மொழிவில் 60 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான தீர்மானத்தை நோக்கிய பாதை ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,60 நாட்களில், இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, காசாவில் மீதமுள்ள இஸ்ரேலிய கைதிகளில் பாதி பேரை ஹமாஸ் விடுவிக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், இஸ்ரேலிய இராணுவம், மனிதாபிமான உதவிகளையும் காசா பிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் முன்னதாக இதே போன்ற திட்டங்களை நிராகரித்ததால், இது போருக்கான உடனடி முடிவுக்கு உத்தரவாதம் அளிக்காது என்று போரியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.