ஹமாஸ் போர் நிறுத்தம் ஒப்பந்தம் ; ட்ரம்பின் நேரடி எச்சரிக்கை
ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேலை அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது இதற்கிடையே, ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என டிரம்ப் கூறினார்.
இது தொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது,
"நான் ஒரு வார்த்தை சொன்னால் இப்போது இஸ்ரேல், காசாவின் தெருக்களுக்குத் திரும்பும். இஸ்ரேல் ராணுவத்தினர், காசா உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியும். நான் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
ஹமாஸில் என்ன நடக்கிறதோ அது விரைவில் சரி செய்யப்படும். அவர்கள் ஆயுதங்களை கீழிறக்கவில்லை எனில் நாங்கள் இறக்க வைப்போம். அது மிகவும் மோசமாகவும் விரைவாகவும் நடக்கும்" என்று கூறியுள்ளார்.