விடுதலையாகும் இஸ்ரேலிய பணய கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்!
இஸ்ரேல் - காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், சுமார் 2 மணித்தியால தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி, பணய கைதிகளான 24 வயதான ரோமி கொனின், 28 வயதான ஏமி டமாரி, 31 வயதான டோரன் ஸ்டான்பிரிசர் ஆகிய 3 பேரை இன்றையதினம் (19-01-2025) விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
விடுதலை செய்யப்படுள்ள பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் மதியம் 2.45 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி காலை 11.15 மணி) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.