மேலுமொரு இஸ்ரேல் பெண்ணை விடுவித்த ஹமாஸ்
தங்களிடம் பிணைக்கைதியாக இருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாச் இடையிலான போரில் நேற்றைய 24 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 கடந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள்.
பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம்
பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தி இருந்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த தலா 2 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்த நிலையில் அவர்கள் எகிப்து வழியாக மீட்கப்பட்டனர்.
மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில், தங்களிடம் பிணைக்கைதியாக இருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நலமுடன் உள்ளார் என இஸ்ரேல் உளவு நிறுவனம் ஷென் பெட் தெரிவித்துள்ளது.