மேலும் இருவரை விடுதலை செய்த ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வராத நிலையில் ஹமாஸ் தனது பிடியிலிருந்த மேலும் இரு பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது.
கத்தார் மற்றும் எகிப்து மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி காரணமாக 85 வயதான யொசெவ்ட் லிவ்சிட்ஸ் 79 வயதான நுரிட் கூப்பர் என்ற இரண்டு பெண்களையே ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
இவர்களை கடந்த 7 ம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்ரேலின் தென்பகுதி நகரான நிர் ஒஸ் கிப்புட்சிலிருந்து ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது. எனினும் அவர்களின் கணவன்மார்களை விடுதலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நல்ல விடயங்கள் இடம்பெறலாம் என்பதற்கான அறிகுறி
இதேவேளை தமது தாயார் விடுதலை செய்யப்பட்டமை ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக யொசெவ்ட் லிவ்சிட்ஸின் மகள் தெரிவித்துள்ளார்.
இருவரும் விடுதலை செய்யப்பட்டமை நல்ல விடயங்கள் இடம்பெறலாம் என்பதற்கான அறிகுறி என சரோனே லிவ்சிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதோடு எனது தாயாரலும் நன்கு நடக்கவும் பேசவும் முடியும் அவர் நடந்து எல்லையை கடந்துள்ளார் என நினைக்கின்றேன் இது மிகவும் ஆச்சரியமான விடயம் என மகள் தெரிவித்துள்ளார்.
எனினும் லிவ்சிட்சின் தந்தை தொடர்ந்தும் ஹமாசின் பிடியில் உள்ளமை குறித்து அவர் கூறுகையில்,
என்னுடைய தந்தை இன்னமும் அங்கிருக்கின்றார் பலர் அங்கு உள்ளனர் அனைவர் குறித்த நற்செய்திக்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.