ஹமில்டனில் மூன்று வாகனங்கள் மோதி 10 வயது குழந்தை உயிரிழப்பு
ஹமில்டனில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கடுமையான விபத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
டிரினிட்டி சர்ச் சாலை மற்றும் கையட் சாலை சந்திப்பில் ஏற்பட்டதாக ஹமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹோண்டா சிவிக் காரில் இருந்த நால்வரும் காயமடைந்துள்ளனர். இதில் 10 வயது சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருவரின் நிலை தீவிரமாக உள்ளதாகவும், மற்றொருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சியரா வாகனத்தில் பயணித்த மூவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தை தொடர்ந்து ஹமில்டன் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
சம்பவ இடத்தில் சாலை பல மணி நேரம் மூடப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது.