கனேடிய குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கிய விவகாரம்... பொலிசார் வெளியிட்ட பின்னணி
ஹாமில்டனில் வீடு புகுந்து தாக்குதல் முன்னெடுத்த சம்பவத்தில் 25 வயது நபர் மீது வழக்கு பதிந்துள்ளதால பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் ஹாமில்டன் பொலிசார் வெளியிட்ட தகவலில், ஃபகிர் அலியின் கடத்தலில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை இன்னும் தேடுவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஹாமில்டனில் உள்ள ஃபகிர் அலியின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் அவரை கடத்திச் சென்றதுடன், தடுக்க முயன்ற ஃபகிர் அலியின் மகன் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததுடன், இன்னொரு மகனை காயப்படுத்தி சென்றுள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் ஒருவர் அடையாளம் கண்டுள்ள நிலையில், இன்னும் இருவரை தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 16ம் திகதி அதிகாலை 3 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஃபகிர் அலியை குறிவைத்தே தாக்குதல் நடந்துள்ளதாகவும், ஆனால் தடுக்க சென்ற அவரது மகன்கள் இருவரும் தாக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் என்ன என்பது இதுவரை வெளிவரவில்லை என தெரிவித்துள்ள பொலிசார், ஆனால் பண விவகாரமாக இருக்கலாம் இந்த வீடு புகுந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதன் பின்னணி என பொலிசார் தெரிவித்துள்ளனர்.