சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ்; மூவர் பலி; 144 பேர் அச்சம்
கேப் வெர்தே (Cape Verde) கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டச்சு நாட்டுச் சொகுசு கப்பல் ஒன்றில், 'ஹண்டா' (Hanta) எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் பயணம் செய்த 147 பயணிகளில், இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் எஞ்சியுள்ள 144 பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், மேலும் ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் மற்றவர்களுக்கும் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் அமெரிக்கப் பகுதியில் கப்பல் பயணித்தபோது, பயணிகள் அதில் ஏறுவதற்கு முன்னரே இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.