வேல்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
இங்கிலாந்தின் வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அதன்படி முதலில் திட்டமிட்டபடி ஜனவரி 5ஆம் திகதிக்கு பதிலாக புத்தாண்டு தினத்தன்று இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் இது தீங்கு சமநிலையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.
ஏனெனில் ஊழியர்கள் இல்லாதது சேவைகளில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறதாகவும் அவர் குறிப்பிட்டார். இது டிசம்பர் 22ஆம் திகதி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துடன் தற்போது வேல்ஸ் இணைந்துள்ளது.
இதேவேளை ஸ்கொட்லாந்தில் இன்னும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் காலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.