இந்துக் கோவிலில் இனவெறி வாசகம் ; மர்ம நபர்கள் அட்டூழியம்
ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் பக்தர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர்.
இனவெறியில் கருத்துகள்
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மெல்போர்னின் போர்னியா பகுதியில் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிவப்பு பெயின்ட்டில் இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர். மேலும், அந்த பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் இக்கும்பல் இதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல், எங்களது அடையாளம், வழிபாட்டுக்கான உரிமை மற்றும் மத சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டதாக உணர்கிறோம் என தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.