நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரயில்கள்; 160 பயணிகளின் நிலை?

Sulokshi
Report this article
மலேசியாவில் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் உள்ள KLCC இரயில் நிலையத்திற்கு அருகே இந்த கொரோன விபத்து நடந்துள்ளது. இந்நிலையில் மலேசிய பிரதமர் Muhyiddin Yassin உடனடியாக இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் 40 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை யாரும் உயிரிழக்க வில்லை என்று, போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Wee Ka Siong கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது ஒரு தீவிரமான விபத்து, இடு குறித்து விசாரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. APAD-(APAD என்பது நில பொது போக்குவரத்து முகமைக்கான சுருக்கம்.)இன் இயக்குநர் ஜெனரல் இந்த சம்பவத்தின் ஆரம்ப அறிக்கையை நாளை எனக்கு அனுப்புவார்.
இதில் ஒரு இரயில் 20 கி.மீற்றர் வேகத்திலும், மற்றொரு இரயில் 40 கி.மீற்றர் வேகத்திலும் வந்த போது, இந்த விபத்து நடந்துள்ளமைபெரும் அதிர்ச்சியாக உள்ளது.
விபத்து ஏற்பட போகுது என்பதை அறிந்த, சில பயணிகள் உடனடியாக இரயிலில் இருந்து வெளியேற முயன்றதால், அதிக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் , விபத்து தொடர்பிலான முழு விசாரணைக்கு பின்னர் அனைத்தையும் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.