கனடாவில் பைசர் பயோடெக் தடுப்பூசிக்கு அனுமதி
கோவிட் 19 பெருந்தொற்றுக்காக பயன்படுத்தப்படும் புதிய பைசர் பயோடெக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனடிய சுகாதார நிறுவனம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
கோவில் பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு எதிர்த்து செயல் படக்கூடிய புதிய வகை தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் பல்வேறு நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய தடுப்பூசிகளுக்கு கனடிய சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே நோவாவெக்ஸ், மொடர்னா போன்ற தடுப்பூசி வகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பைசர் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குளிர்கால பகுதியில் ஏற்படக்கூடிய கோவில் பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கனடிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பழைய தடுப்பூசிகளை அழிக்குமாறும் புதிதாக இற்றைப் படுத்தப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.