புதிய மடர்னா கோவிட் தடுப்பூசியை பயன்படுத்த கனடாவில் அனுமதி
கனடாவில் கோவிட் பெருந்தொற்றுக்கு பயன்படுத்தப்படும் புதிய மடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் சுகாதாரத் திணைக்களத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக கோவிட் பெருந்தொற்றின் திரிபுகளில் ஒன்றான ஒமிக்கிரான் திரிபு மற்றும் அதன் உப திரிபுகளுக்கு எதிராக தொழிற்படக்கூடிய புதிய மாடர்னா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கனடாவின் சுகாதார அமைச்சர் ஜியான் யுவிஸ் டு க்ளோஸ் (Jean-Yves Duclos ) இந்த புதிய தடுப்பூசி பயன்பாடு தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.
மேலும் மேலும் கோவிட் தடுப்பூசி பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் விளக்க உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி மரண நிறுவனம் தமது புதிய தடுப்பூசிக்கு அனுமதி கோரி கனடிய சுகாதாரத் திணைக்களத்தில் விண்ணப்பம் செய்திருந்தது.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சுகாதாரத் திணைக்களம் இதனை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிகளாக இந்த புதிய மடர்னா தடுப்பூசி கனடியர்களுக்கு ஏற்றப்பட உள்ளது