கனேடிய மாகாணம் ஒன்றில் அமைச்சரை சூழ்ந்துகொண்டு அவமதித்த மக்கள்... கண்ணீர் விட்ட மனைவி
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில், சுகாதாரத்துறை அமைச்சர் அவமதிக்கப்பட, அவர் மனைவி கண்ணீர் விட்டழுத ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றது.
நேற்று கனடாவில் கனடா தின நிறைவுப் பேரணி நடந்த நிலையில், பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டதை மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, அங்கிருந்த ஆல்பர்ட்டா சுகாதாரத்துறை அமைச்சரான Tyler Shandro, அவரது மனைவி Andrea மற்றும் அவர்களது இரண்டு பையன்களை ஒரு கூட்டம் எதிர்ப்பாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
Shandroவை சிறையிலடை என ஒருவர் சத்தமிட, நீங்கள் ஆல்பர்ட்டாவின் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாசம் செய்துவிட்டீர்கள் என மற்றொருவர் சத்தமிட்டார். அத்துடன் ஒருவர் Shandroவின் மகனையும் பார்த்து, உன் அப்பா ஒரு போர்க்குற்றவாளி என சத்தமிட்டார்.
கொரோனா கட்டுப்பாடுகளும், தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களும் மக்களுக்கு ஏற்படுத்திய அழுத்தம் சுகாதாரத்துறை அமைச்சரைக் கண்டதும் இப்படி வெடித்துவிட்டது.
இதுபோக, ஒரு ஆணும் ஒரு பெண்ணும், ஆபாசமாக சத்தமிடவும், சைகை காட்டவும் தொடங்க வேறு வழியில்லாமல் தன் சிறு பையனின் காதுகளை Shandro கைகளால் பொத்திக்கொள்ள, அவரது மனைவி Andrea கண்ணீர் விட்டழுதார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிகின்றன...