பிரித்தானியாவில் நபர் ஒருவரின் ஈவிரக்கமற்ற செயல்!
பிரித்தானியாவில் தாய் மற்றும் மூன்று குழந்தைகளை கொன்ற டேமியன் பெண்டல் (Damian Bendell) தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
டெர்பிஷையரில் உள்ள வீடொன்றில் 11வயது லேசி பென்னடம், 13 வயது சகோதரர் ஜான் பால் பென்னட், அவர்களது தாய் டெர்ரி ஹாரிஸ்(35) மற்றும் லேசியின் 11வயது தோழி கோனி ஜெண்ட் ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக டேமியன் பெண்டலை பொலிஸார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டெர்பி கிரவுன் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும் கடந்த செப்டம்பரில் லேசிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டையும் பெண்டல் ஒப்புக் கொண்டுள்ளார்.
32 வயதுடைய அவர் கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மீண்டும் நவம்பர் 24ம் திகதி விசாரணையை எதிர்கொள்வார் என்றும், அதுவரை டேமியன் பெண்டல் காவலில் வைக்கப்படுவார் எ தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மூன்று வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதியன்று ஷெஃபீல்டுக்கு அருகிலுள்ள கில்மார்ஷ், சந்தோஸ் கிரசென்ட்டில் உள்ள ஒரு வீட்டில் நால்வரும் இறந்து கிடந்தனர்.
இதேவேளை விசாரணையின் பிற விவரங்களை சட்டக் காரணங்களுக்காக தற்போது தெரிவிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.