டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டொராண்டோ நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை (Heat wave) வீசி வருவதால், பொதுமக்களுக்கு வெப்ப எச்சரிக்கை (Heat warning) விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெயிலின் தாக்கம் 35 பாகை செல்சியஸ் போல உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் "முதல் வெப்ப அலை" செவ்வாய்க்கிழமை இரவு வரை நீடிக்கும் என கனடா சுற்றுச்சூழல் நிறுவனம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்த வெப்ப எச்சரிக்கை டொராண்டோ மற்றும் டொராண்டோ முழுவதற்கும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக 30 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம்.
மாலை நேரத்தில் மேகமூட்டம் அதிகரித்து, 60% மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் வெப்பநிலை 19 பாகை செல்சியஸாகக் குறையும். நாளையும் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 பாகை செல்சியஸாக இருந்தாலும், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக அது 34 பாகை போல உணரப்படும்.
இரவில் வெப்பநிலை திடீரென 12 பாகை செல்சியஸாகக் குறைய வாய்ப்புள்ளது.