ஹீத்ரோ விமான நிலையம் எடுத்த தீர்மானம்! தடுத்த மன்னர் சார்லஸ்
முடிசூட்டுவிழாவையொட்டி, ஹீத்ரோ விமான நிலைய முனையத்திற்கு மன்னர் சார்லஸ் பெயர் சூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹீத்ரோ விமான நிலையம், மன்னர் சார்லஸ் இன் முடிசூட்டுவிழாவையொட்டி, முனையம் ஒன்றிற்கு (Terminal 5) மன்னர் சார்லஸ் பெயரை சூட்ட விரும்பியுள்ளது.
மன்னர் பெயரை சூட்ட வேண்டாம்
ஏற்கனவே, மற்றொரு முனையத்திற்கு (Terminal 2) மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் Queen’s Terminal என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் , தகவல் அறிந்ததும், அமைச்சர்களை அழைத்து, மன்னர் பெயரை விமான நிலைய முனையத்துக்கு சூட்ட வேண்டாம் என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் கேட்டுக்கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் விரும்பியான மன்னர், தனக்கும் விமான நிலையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததாலும், விமான நிலையத்தின் கோரிக்கையை பணிவுடன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.