இரண்டு துண்டாகி விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர் ; 5 பேர் பலி்; அதிர்ச்சி தரும் காணொளி
ரஷ்யாவின் டெகஸ்டான் நகரில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். கடற்கரை அருகே உள்ள நிலப்பரப்பில் ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் இரண்டு துண்டாகி கடல் அருகில் உள்ள நிலப்பரப்பில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறி அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
A catastrophic failure results in this Ka-226 helicopter crash in Russia
— Kat (@DeathbatBunny) November 8, 2025
Killing 4 while injuring 7.
The second catastrophic failure here was the cameraman. pic.twitter.com/gLU4solCDc