காட்டுக்குள் கண்ட புகை மூட்டம்: விசாரித்து சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன உள்ளூர் ஹைக்கர் ஒருவரை இரண்டு வாரங்களுக்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளனர்.
கடந்த 7ம் திகதி Elfin Lakes பகுதியில் வாகனத்தில் சென்று இறங்கியுள்ளார் உள்ளூர் ஹைக்கரான Daniel Ring. இரண்டு நாட்களுக்கு பிறகு, ஜூலை 9ம் திகதி அவர் திரும்ப வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட பகுதிக்கு அவர் திரும்பவில்லை என்பது மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் வன பாதுகாப்பு குழுவினரின் ஹெலிகொப்டர் ரோந்து சென்ற நிலையில், வித்தியாசமாக புகை மூட்டத்தை கண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற குழுவினர் Daniel Ring-ஐ கண்டுபிடித்து மீட்டுள்ளனர். 33 வயதான Daniel Ring சில நாட்கள் மட்டுமே வனப்பகுதியில் செலவிட திட்டமிட்டு சென்றுள்ளார். அதற்கான பொருட்களை மட்டுமே அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் 14 நாட்கள் வனத்தில் சிக்கியுள்ளதுடன், எடுத்துச் சென்ற உணவை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, உதவிக்காக காத்திருந்ததாக Daniel Ring தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவ உதவியை நாடும் அளவுக்கு பாதிக்கப்படவில்லை எனவும், இதனால் நேரடியாக அவரது குடியிருப்புக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.