பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று ; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

HIV Symptoms World Fiji
By Vironika Sep 17, 2026 11:41 AM GMT
Report

புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது. பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று ; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு | Hiv Infection In Fiji Is Worsening

2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முறைகள் காரணமாக HIV தொற்றுகள் அதிகளவில் கண்டறியப்படுவதுடன், தொற்றுக்குள்ளானவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்குவதற்கும் இது உதவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இலவசமாகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ரகசியத்தன்மையுடனும் HIV பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை விரிவுபடுத்த பீஜி நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், HIV தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துவதுடன், ஊசி மூலம் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கான பாதிப்பு குறைப்பு சேவைகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

UNAIDS தகவலின்படி, ஊசி மற்றும் சிரிஞ்ச் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, பீஜி நாட்டில் புதிய HIV தொற்றுகளின் எண்ணிக்கை 2010 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் சுமார் 9,100 பேர் HIV தொற்றுடன் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே தங்களது HIV நிலையை அறிந்திருந்தனர். மேலும், 22 சதவீதம் பேர் மட்டுமே எதிர்வைரஸ் சிகிச்சையைப் பெற்று வந்தனர்.

தொற்று ஏற்பட்ட விதம் உறுதிப்படுத்தப்பட்ட HIV சம்பவங்களில், பாதிக்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்பு மூலம் பரவியுள்ளதுடன், 42 சதவீதத்துக்கும் அதிகமானவை ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதுடன் தொடர்புடையவை என UNAIDS தெரிவித்துள்ளது.

இதனிடையே, பீஜி நாட்டில் HIV தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உள்ள கொள்கை மற்றும் நடைமுறைத் தடைகளை அகற்றும் நோக்கில், ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US