ரொறன்ரோ தீவில் இளைஞரை நையப்புடைத்த கும்பல்
ரொறன்ரோ தீவில் தன்பாலின ஈர்ப்பாளர் என கூறி இளைஞரை நையப்புடைத்த கும்பலில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் 24 வயது Elijah McGibbon என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர். ஜூன் 5ம் திகதி ரொறன்ரோ தீவில் கப்பல் நிறுத்துமிடத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்தன்று இரவு 11.30 மணி அளவில் தமது 27 வயது தோழியுடன் 24 வயதான David Gomez என்ற இளைஞர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஒரு கும்பலிடம் இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அதில் இருவர் இந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட David Gomez தமக்கு நேர்ந்த சம்பவத்தை பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்தார். ரொறன்ரோ பொலிசார் இந்த வழக்கை விசாரித்ததுடன், தற்போது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இது ஒரு சிக்கலான வழக்கு என குறிப்பிட்டுள்ள ரொறன்ரோ பொலிசார், சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.