தடுப்பூசி விவகாரம்... அதிரடி முடிவெடுத்த முக்கிய மருத்துவமனை: சிக்கலில் பலர்

Arbin
Report this article
தடுப்பூசி கட்டாயம் என்ற காலக்கெடுவை ஏற்க மறுத்த ஊழியர்கள் 57 பேர்களை தென்மேற்கு ஒன்ராறியோ மருத்துவமனை ஒன்று வேலையைவிட்டு நீக்கியுள்ளது.
குறித்த மருத்துவமனையில் பணியாற்றும் 4,155 ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். செவிலியர்களில் 99 சதவீதம் பேர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு விதித்துள்ளது குறித்த மருத்துவமனை. இதில் 57 பேர்கள் காலக்கெடுவுக்கு பின்னரும் தடுப்பூசி போட்டுகொள்ள மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் 32 பேர்கள் மருத்துவ ஊழியர்கள் என தெரிய வந்துள்ளது. செப்டம்பர் 22ம் திகதி தடுப்பூசி போட்டுக்கொள்ள கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குறிப்பிட்ட நாளுக்கு முன்னர் முதல் டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களுக்கு 2 வார காலம் ஊதியமற்ற விடுப்பு வழங்கப்பட்டது.
அப்போது, 147 ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்ததாக மருத்துவமனை தரப்பு தெரிவித்திருந்தது.
தற்போது 57 பேர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளது.