சிறு தவறினால் 4000 டொலர்களை இழந்த கனடிய தம்பதி
கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் சிறு தவறு காரணமாக சுமார் நான்காயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மைக் அன்டர்வுட் மற்றும் ஜெசிக்கா ரொபர்ட்சன் ஆகியோர் இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
தங்களது வீட்டை விற்றுவிட்டு புதிய குடியிருப்பொன்றுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர்.
தங்களது ஒரு குடியிருப்பினை வாடகைக்கு விடுவதற்கு இந்த தம்பதியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன் போது ஒரு சிறு தவறினால் அவர்களது வாடகைத் தொகை வேறும் ஒருவரின் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
வாடகைப் பணம் மைக் அன்டர்வுட் என்ற பெயரினை உடைய மற்றுமொரு நபரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
தட்டச்சி செய்த போது ஏற்பட்ட எழுத்துப் பிழையினால் இவ்வாறு பணத்தை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.