கனேடிய ஒலிம்பிக் வீரர்களுக்கு கிடைக்கும் சன்மானம் எவ்வளவு?
ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு பரிசுத்தொகை ஏதும் வழங்காது என்றாலும், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறிப்பிட்ட தொகையை வீரர்களுக்கு அளித்து வருகிறது.
அந்த வகையில், கனடாவின் ஒலிம்பிக் கூட்டமைப்பானது தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 20,000 டொலர் பரிசாக அளிக்கிறது. இதேப்போன்று வெள்ளி பரிசாக வெல்லும் வீரர்களுக்கு 15,000 டொலர்கள் எனவும் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 10,000 டொலர் எனவும் சன்மானம் வழங்கப்படுகிறது.
இதில் தனிப்பட்டமுறையில் கலந்து கொள்ளும் வீரர்களும் குழுவாக கலந்து கொள்ளும் வீரர்களும் தனித்தனியாக சன்மானம் வழங்கப்படுகிறது. ஒருவர் எத்தனை பதக்கம் வென்றாலும், அதற்கான சன்மானம் பெற முடியும் என்றே கூறப்படுகிறது.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் அமெரிக்க வீரர்களுக்கு 37,500 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்குகின்றனர். வெள்ளி(22,500 அமெரிக்க டொலர்) வெண்கலம்(15,000 அமெரிக்க டொலர்)