பிங்க் டெக்ஸை எவ்வாறு தவிர்ப்பது?
ஆண் பிள்ளைகளை விடவும் பெண் பிள்ளைகளுக்கான பொருட்களின் விலை உயர்வாக காணப்படுகின்றது.
இவ்வாறு பெண் பிள்ளைகளின் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு பிங் டெக்ஸ் என குறிப்பிடப்படுகின்றது.
உதாரணமாக சில வகை நிறங்களிலான பொருட்களுக்கான விலைகள் மிக உயர்வாக காணப்படுகின்றது.
பொதுப்பால்நிலையுடைய பொருட்களுக்கான விலைகள் குறைவாகவே காணப்படுகின்றது.
கறுப்பு, கிரே, சிகப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் போன்ற நிறங்கள் இரண்டு பாலினத்தவர்களும் பயன்படுத்துகின்றனர்.
இதனால் இவ்வாறான பொருட்களின் விலைகள் குறைவாக காணப்படுகின்றது.
பெண் பிள்ளைகளுக்கு பிரத்தியேகமாக பொருட்கள், ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்யும் போது கூடுதல் விலையை செலுத்த நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்யும் பெற்றோர் மாற்று வழிகளை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.