10 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த இரு பொருட்களை இப்படி பயன்படுத்தினாலே போதும்
தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான்.
அதில் எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவும் பொருட்களுள் முதன்மையானது.
எலுமிச்சையில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை சீராக்கி, எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
அதனுடன் பூண்டை சேர்த்து கொள்வதனால் இன்னும் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. தற்போது அவற்றை எப்படி பயன்படுத்தனால் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை - 1
- பூண்டு - 3 பற்கள்
- சுடுநீர் - 1 கப்
செய்முறை
முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு பூண்டு பற்களைத் தட்டி, எலுமிச்சை நீரில் போட்டு, 15 நிமிடம் கழித்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். பூண்டு பற்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.
இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். நிச்சயம் இந்த பானம் மிகவும் சுவையாக இருக்காது. இந்த பானத்தைக் குடிப்பது சற்று கஷ்டமாகத் தான் இருக்கும். இருப்பினும், தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால், கஷ்டத்தை அனுபவித்து தானே ஆக வேண்டும்.