கனடாவில் வேலை இருப்பதாக ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடியாளர்களிடமிருந்து தப்புவது எப்படி?

Canada job
By Balamanuvelan Jan 25, 2022 04:30 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

எப்படியாவது கனடாவில் ஒரு வேலை கிடைத்துவிடாதா என ஆவலுடன் காத்திருப்போர், தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது குறித்து முன்பின் யோசிப்பதில்லை. சொல்லப்போனால் பணம் செலுத்தவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த விடயம் இத்தகையவர்களை ஏமாற்ற காத்திருக்கும் மோசடியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

2021ஆம் ஆண்டில் மட்டுமே இதுபோல் கனடாவில் வேலை கிடைக்கும் என்று நம்பி பணத்தை இழந்ததாக வந்துள்ள புகார்கள் ஒன்றிரண்டல்ல, 68,000. அவர்கள் இழந்த தொகையோ, சுமார் 231 மில்லியன் டொலர்கள்!

இப்படி கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக ஏமாற்றும் மோசடியாளர்களிடமிருந்து தப்புவது எப்படி?

ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு போலியானது என அறிந்துகொள்வது எப்படி?

  1. நீங்கள் விண்ணப்பிக்காத ஒரு இடத்திலிருந்து உங்களுக்கு வேலை இருப்பதாக ஒரு அழைப்பு வந்தால், பெரும்பாலும் அது மோசடியாக இருக்கலாம்.

  2. அவர்கள் மிக அதிக சம்பளம் தருவதாக வாக்களிப்பதுடன், வயதோ, அனுபவமின்மையோ வேலை பெறுவதற்கு தடையில்லை என்பது போன்ற வாக்குறுதிகளை அளிக்கலாம்.

  3. சில நேரங்களில், ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக்கூட மோசடியாளர்கள் வேலை வாய்ப்பு இருப்பதாக உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உடனடியாக அதை நம்பி உங்கள் தகவல்களை அவர்களுக்கு பதில் அனுப்பிவிடவேண்டாம். அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, அவர்கள் உங்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பினார்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி அந்த நிறுவனத்தில் தொடர்பு முகவரி, தொலைபேசி எண் முதலான விவரங்களே அந்த மின்னஞ்சலில் இல்லையென்றால், அப்போதே எச்சரிக்கையாகிவிடுங்கள், அது போலியானதாக இருக்கலாம்.

  4. வேலை கிடைக்கவேண்டுமானால் பணம் செலுத்தவேண்டும் என மோசடியாளர்கள் கேட்கலாம். சில நேரங்களில், அவர்கள் உங்களுக்கு சில பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக காசோலை கூட அனுப்பலாம். ஆனால், அந்தக் காசோலை பெரும்பாலும் போலியானதாக இருக்கும். ஆகவே, அதை நம்பி அந்தக் காசோலையைப் பயன்படுத்தி அவரசரப்பட்டு எதையாவது வாங்கிவிடாதீர்கள்.

  5. இந்த மோசடியாளர்கள், உங்கள் வீட்டு முகவரி, சமூகக் காப்பீட்டு எண் (Social Insurance Number - SIN) போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம். தப்பித்தவறிக்கூட உங்கள் சமூகக் காப்பீட்டு எண்ணை யாருக்கும் கொடுத்துவிடாதீர்கள் (சட்டப்படி கேட்கப்படாலொழிய). வேலை கொடுப்பவர்கள் உங்களை வேலைக்கு எடுத்தபிறகே அவர்களுக்கு உங்களுடைய சமூகக் காப்பீட்டு எண் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  6.  கடைசியாக, எந்த விடயத்திற்கும் சம்மதம் தெரிவிப்பதற்கு முன், சிறிது இணையத்தில் அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த லிங்கையும் கிளிக் செய்துவிடவேண்டாம். எந்த செய்திக்கும் பதிலளிக்கவேண்டாம். உண்மையான வேலை வழங்கும் ஒருவர் என்று தெரிந்தாலன்றி அவர் அனுப்பும் அந்த விடயத்தையும் பதிவிறக்கம் செய்யவேண்டாம். அனுப்புவரின், மற்றும் அவரது நிறுவனத்தின் பின்னணி குறித்த விடயங்களை இணையத்தில் தேடி ஆராய்ந்து பாருங்கள்.

உங்களுக்கு அந்த வேலை வாய்ப்பு ஆஃபர் போலியானதாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால், Canadian Anti-Fraud Centre (CAFC) மற்றும் Better Business Bureau (BBB) ஆகிய அமைப்புகளுக்கு அது குறித்து புகாரளிக்கலாம்.  

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US