தாய்லாந்தில் தலைநகரில் திடீரென ஏற்பட்ட பாரிய பள்ளம்; கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமான வீதி
தாய்லாந்து நாட்டில் மக்கள் நடமாடும் பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாலை ஒன்றில் வழக்கம்போல வாகனங்கள், மக்கள் சென்று வந்த நிலையில் திடீரென சாலையில் விரிசல் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து காவலர்கள் வாகனங்களை சற்று முன்னாலேயே நிறுத்தியதுடன் மக்களையும் அப்புறப்படுத்தினர். இதெல்லாம் நடந்துக் கொண்டிருந்தபோதே சில நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் அமிழ்ந்த சாலை மொத்தமாக சரிந்து விழுந்து பெரும் பள்ளம் உருவானது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் சாலைகளின் மேல்புறம் சமதளமாக இருந்தாலும், நிலத்தடியில் ஏற்படும் மாற்றங்கள் மண் சரிவுகள் ஆகியவற்றால் திடீரென சாலைகள் இவ்வாறு பள்ளங்களாக மாறுவதாக கூறப்படுகிறது.
#WATCH A 50 metre-deep sinkhole opened near a Bangkok hospital early on Wednesday, sucking in cars and electricity poles, leaving commuters stunned and prompting an emergency response in the Thai capital.#Bangkok #Sinkhole #hospital #footage #emergency #Breaking pic.twitter.com/blaD7hnP37
— mishikasingh (@mishika_singh) September 24, 2025