டொராண்டோவில் அவசர சேவைகளுக்கு திருப்பிவிடப்பட்ட நூற்றுக்கணக்கான 911 அழைப்புகள்
கனடாவின் டொராண்டோ காவல்துறையினருக்கு வரவிருந்த நூற்றுக்கணக்கான அவசர கால 911 அழைப்புகள், ஏற்பட்ட திடீர் "தொழில்நுட்பக் கோளாறு" காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை பிற அவசர உதவிப் பிரிவுகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
குறித்த தினம் முற்பகல் 11:45 மணி முதல் மதியம் 12:15 மணிக்கு இடைப்பட்ட அரை மணி நேர காலப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட சமயத்திலும் 911 அவசர அழைப்பு இயக்குநர்களால் (Operators) அழைப்புகளைப் பெற முடிந்ததாக காவல்துறை விளக்கமளித்துள்ளனர்.

எனினும், ஏற்பட்ட கணினி சார்ந்த பிழை காரணமாக, முன்னரே திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த அவசர கால மாற்று ஏற்பாடுகளின்படி சில 911 அழைப்புகள் டொராண்டோ காவல்துறையுடன் இணைந்து செயல்படும் அண்டை நகர அவசர சேவைப் பிரிவுகளுக்குத் தானாகவே மாற்றப்பட்டன.
இதன் மூலம், அவசர உதவியை நாடிய பொதுமக்களின் அழைப்புகள் கைவிடப்படாமல், பிற பிரிவினரால் உடனுக்குடன் கையாளுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட காலப்பகுதியில் வந்த அனைத்து அழைப்புகளும் முறையாகக் கண்டறியப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், இந்தத் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.